Thursday 2 July 2015

2ஜி முறைகேடு.! உண்மை நிலை என்ன?

2ஜி  முறைகேடு.! உண்மை நிலை என்ன?

    இப்போதைய ஸ்பெக்ட்ரம் ஏலம் காண்பிக்கும் உண்மைகள்... ஆ.ராசாவால், 2Gயில் 1.76 லட்சம் கோடி இழப்பு என்று CAG அடித்துவிட்டபோது, இழப்பை கணக்கிட ஆடிட்டர் வினோத் ராய் எடுத்துக்கொண்ட தொகையானது 1 MHzக்கு 3,350 கோடி... அதாவது 52.7 Mhz அலைகற்றைகளை, இந்த தொகைக்கு ஏலம் விட்டிருந்தால், 1.76 லட்சம் கோடி அரசுக்கு கிடைத்திருக்கும்,ஆனால் கிடைத்ததோ 12,386 கோடிகள் என்பதுதான் CAGயின் அறிக்கை.. இப்போது 2G ஏலம் நடைபெறுவது மொத்தம் 380.75 MHz அலைகற்றைக்கு. வினோத் ராயின் கணக்குப்படி 380.75 X 3,350 = 12.75 லட்சம் கோடி கிடைத்திருக்கவேண்டும்...
 ஆனால், ஏலத்தில் கிடைத்திருப்பதோ வெறும் 1.1 லட்சம் கோடிகள் தான்... அதாவது வெறும் 9% தொகை மட்டும்மே கிடைத்துள்ளது.. . ஏலத்தின் படி, ஒரு MHz அலைகற்றைக்கு சுமார் 289 கோடிகள் தான் கிடைத்திருகிறது...    CAG கணக்கிட்ட 1 MHzக்கு 3,350 கோடி எங்கே???? ஏலத்தில் கிடைக்கும் 1 MHzக்கு 289 கோடிகள் எங்கே.... ராசா அவர்கள்     பின்பற்றிய TRAI வழிகாட்டுதலில், 2001 ஆண்டைய ஸ்பெக்ட்ரம் விலை 1 MHzக்கு 267.51 கோடிகள்...    எனவே, 1.76 லட்சம் கோடி இழப்பு என்பதெல்லாம் மிகபெரிய மோசடி..... ஏமாற்று வேலை...

No comments:

Post a Comment