Friday 3 July 2015

ஹெல்மெட் காமடி!



'ஹெல்மட்' காமெடி:'வாட்ஸ் ஆப்'பில்பரவும் 'ஹெல்மெட்' காமெடி:

போலீசார்: உன் செயினை யாருமா பறிச்சது?
பெண்: கறுப்பு ஹெல்மெட் போட்ட ஆள் சார்.
போலீசார்: வண்டியை அவன் தான் ஓட்டினானா?
பெண்: இல்ல சார்... ஓட்டுனவன், பச்சை ஹெல்மெட் போட்டு இருந்தான்.
போலீசார்: சாட்சி யாராவது இருக்காங்களா?
பெண்: சிவப்பு ஹெல்மெட் போட்டு இருந்தவரு, இதை கண்ணால பார்த்தாரு சார்.
போலீசார்: இப்படி சொன்னா எப்படிம்மா... ஏதாவது அடையாளம் சொல்லு!
பெண்: பின்னாடி உட்கார்ந்து இருந்த பொண்ணு, வெள்ளை நிற ஹெல்மெட் போட்டு இருந்தாங்க சார்.
போலீசார்: அட போம்மா, ஹெல்மெட் போடாத ஆளு யாருமே பார்க்கலையா?
பெண்: நான் மட்டும் தான் சார் ஹெல்மெட் போடல...
போலீசார்: அப்ப உன்னோட லைசென்சையும், ஆர்.சி., 'புக்'கையும் எடு!


கொஞ்சம் ஹெல்மட் செய்தி :
தலையில், தொண்டையில் அறுவை சிகிச்சை செய்தோர், கழுத்து சுளுக்கு உடையவர்கள், தைராய்டு பிரச்னை உள்ளோர், நீண்ட நேரம் ஹெல்மெட் அணிந்து செல்ல இயலாது. அவர்களுக்கு, ஹெல்மெட் கட்டாயம் என்ற நடைமுறையில் இருந்து விதிவிலக்கு அளித்தால் நன்றாக இருக்கும் இது குறித்து
உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'கழுத்து சுளுக்கு உடையவர்களை, பார்த்தாலே தெரிந்து விடும்; அறுவை சிகிச்சை செய்தோர், தலையில் கட்டி இருப்போர், தைராய்டு பிரச்னை உள்ளோர், அதற்குரிய மருத்துவ சான்றிதழ்களின் நகல்களை, இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொள்வது நல்லது' என்றனர்.

No comments:

Post a Comment