Friday 3 July 2015

இலக்கியம்

தமிழ் மொழியை காப்போம்! தமிழை கற்பிப்போம்!

          தழிழையே உணவாக உயிராக கொண்டு பழந்தமிழர்கள் வாழ்ந்த நாடு நமது செந்தழிழ் நாடு. ஆனால் இன்று தமிழர்கள் அப்படி இல்லை. பிறமொழிகளை கற்பதிலேயே ஆர்வம் செலுத்துகின்றார்கள். தமிழை கற்பதில் அக்கரை காட்டுவது இல்லை. அரைகுறை ஆங்கிலத்தில் குழந்தைகள் பேசுவதையே பெருமையாக கருதி ஆங்கிலத்தை முதல் மொழியாக தேர்வு செய்து குழந்தைகளை படிக்க வைக்கின்றனர் இந்தக்கால பெற்றோர்கள். பிற மொழிகளை தேர்வு செய்ததன்மூலம், குழந்தைகளின் சுய சிந்தனை ஆற்றலை மழுங்கடிக்கச் செய்கிறார்கள்.
          நமது தாய் மொழி பல்லாயிரம் ஆண்டுகள் பழமை மற்றும் பெருமை உடையது. புகழ்பெற்ற இலக்கண இலக்கியங்களைக் கொண்டது நம் தமிழ் மொழி. இத்தனைய உயரிய பெருமை கொண்ட மொழியை தாய்மொழியாக நாம் பெற்றதற்கு பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டும். இயல், இசை,  நாடகம் என முப்பெரும் விழாக்கள் நடத்தி முற்கால சான்றோர்கள் தமிழ் வளர்த்தார்கள். அறிவியல் நுட்பத்துக்கு ஏற்ப ஆயிரமயிரம் புதிய சொற்களை உருவாக்கம் செய்ய வேர் சொறகளை கொண்டுள்ளது நமது தமிழ்மொழி. இத்தகை மொழியை காக்க நமது குழந்தைகளை தமிழ் வழியில் படிக்க வைப்பதே நல்லது.

No comments:

Post a Comment