Tuesday 21 July 2015

ரஜினி, கமல், விஜய், சூர்யா பட்டியலில் இணைந்த தனுஷ்

ரஜினி, கமல், விஜய், சூர்யா பட்டியலில் இணைந்த தனுஷ்

இளைஞர்களிடையே புகைப் பிடிக்கும் பழக்கம் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் இடம்பெரும் புகைப் பிடிக்கும் காட்சிகள் முக்கியக் காரணமாக உள்ளன. நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்டவர்கள் திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்து, அதை உறுதியாகப் பின்பற்றி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினியும் இதனை பின்பற்றி வருகிறார், அதோடு தனது ரசிகர்களையும் புகை பிடிக்க வேண்டாம் அறிவுறுத்துகிறார்.ஆனால் அவரது மருமகனான தனுஷ் அவருக்கு நேர் எதிராக உள்ளார். அவர் நடிக்கும் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான மாரி படத்தில் , படம் முழுவதும் அவர் புகை பிடித்து கொண்டே இருப்பார். இதனை தனுஷ் தவிர்க்க வேண்டும் என பலர் அறிவுறுத்தி வருகிறார்கள். இனி இது போல் நடிக்க வேண்டாம் என அன்புமணி அறிவுறுத்தி இருந்தார். ரஜினியின் மருமகனாக இருந்து கொண்டு நீங்கள் இப்படி செய்யலாமா என கேட்டார். அதனால் தனுஷ் இனி புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன், எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது என கூறி உள்ளார் 
vijay +thanush+kamal+hassan+ajith

No comments:

Post a Comment