Thursday 2 July 2015

ரூ 2லட்சம் கோடி தர்மம் செய்கிறேன்.

03-07-2015
என் ரூ. 2 லட்சம் கோடி சொத்து முழுவதையும் தான, தர்மம் செய்கிறேன்: சவுதி இளவரசர்

ரியாத்: சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால் தனது ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதாக அறிவித்துள்ளார். சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால் தனது ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்யப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சமூக மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம், இளைஞர்கள்  மேம்பாடு, பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட நல்ல காரியங்களுக்காக என் சொத்து பயன்படுத்தப்படும். என் சொத்துக்களை எவ்வாறு செலவு செய்வது என்பது குறித்து திட்டம் வகுக்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த பணத்தை செலவு செய்ய வேண்டும் என்று கிடையாது என அவர் அதில் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் பவுன்டேஷன் மாதிரி தனது அறக்கட்டளையும் செயல்படும் என்று இளவரசர் அல்வலீத் செய்தியாளர்களிடம் கூறினார். இளவரசர் அல்வலீத் உலக பணக்காரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment