Thursday 2 July 2015

மிரட்டும் சீனா - இந்திய பெருங்கடல் எல்லை பகுதியை கொல்லைப்புறமாக கருதினால் இந்தியா எதிர்காலத்தில் மோதல்களை எதிர்கொள்ள நேரிடும்


மிரட்டும் சீனா
டெல்லி: இந்திய பெருங்கடல் எல்லை பகுதியை கொல்லைப்புறமாக கருதினால் இந்தியா எதிர்காலத்தில் மோதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று மிரட்டியுள்ளது சீனா.

இது தொடர்பாக சீனாவின் தேசிய பாதுகாப்பு மையத்தின் இணை பேராசிரியர் கேப்டன் சயோ யீ கூறியதாவது: இந்தியப் பெருங்கடல் பகுதியில், சீன போர்க்கப்பல்கள் பயணம் செய்ய நேர்ந்தால் அண்டை நாடுகளுக்கு தூதரக ரீதியாக அறிவிக்கப்படும். கடல் எல்லை பகுதி என்பது அனைவருக்கும் சமம். இதனை இந்தியா மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. இந்திய கடல் பகுதியில் உள்ள கடைக்கோடி பகுதி இந்தியாவிற்கு சொந்தம் என்றால் அதற்குள் ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்ரேலியா நாட்டுக்கு சொந்தமான கடற்படைகள் செல்ல அனுமதித்தது ஏன்? இதனை இந்தியா விளக்க முடியாதது ஏன்? இவ்வாறு ஜாவோ யீ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment