Wednesday 1 July 2015

சிறு கதை

ஏமாறாதே! ஏமாற்றாதே

          ஒரு காட்டுல ஒரு புலி இருந்துச்சாம். அநதப்புலி ஒருநாள் இரை தேடி காட்டை சுந்தி வந்ததாம். அப்போ ஒரு இடத்துல வேட்டைக்காரங்க வச்சுருந்த கூண்டுக்குள்ள இருந்த கொஞ்சம் இரையை வாயில் எச்சில் ஒழுக  பார்த்ததாம். அப்புறம் அந்த இரையை சாப்பிட உள்ளே சென்றதாம். உடனே அந்த கூண்டு மூடிக்கொண்டதாம். அதால வெளியே வர முடியலையாம். அதை திறக்க வெளி பக்கமாத்தான் ஒரு கொண்டி இருந்ததாம். அந்த கொண்டியை தூக்கினாதான் புலியால வெளியில வர முடியுமாம். அந்த கொண்டியை புலியால தூக்க முடியலையாம். அதனால அதல வெளியில வர முடியலை. அதனால ரெம்ப கவலையா இருந்ததாம். அப்பப் பார்த்து ஒரு மான் அங்கே வந்ததாம். கூண்டுக்குள்ளெ கவலையோட இருக்குற புலியை பார்த்ததாம். புலி கவலையோட இருந்ததாலும் கூண்டுக்குள்ளே இருந்ததாலும் அதுக்கு தைரியம் வந்துச்சாம். அதனால கூண்டுக்கு அருகே வந்து பார்த்துச்சாம். புலி ரெம்ப கெஞ்சி அழுதுச்சாம் என்னை எப்படியாவது காப்பாத்துனு சொல்லிச்சாம். ஐயோ நீயோ ஒரு புலி வெளியே வந்தா என்னை கொன்னுருவே அதனால நான் திறக்க மாட்டேன்னு சொல்லிச்சாம். ஆனா புலி சொன்னுச்சாம். “சே சே நான் அப்படி இல்லே நான் சைவ புலி நான் கேரட்டு கிழங்கு புல் செடி தான் சாப்பிடுவேன். எந்த உயிரையும் கொல்லமாட்டேன். ஏன்னா நான் ஒரு வருசம் ஒரு சாமியார்கிட்டே வேலை பார்துருக்கேன் அதனால எனக்கும் சாமியார் பழக்கம் வந்துருச்சு. அதனால நீ தைரியமா திற” அப்படினு பொய் சொல்லியது.  அப்படி சொன்னதால மானும் நம்பிடுச்சு. அதனால மான் அந்த கூண்டை திறந்துச்சு. திறந்த உடனே மானை கொல்ல விரட்டியது. மான் ஓடிக்கொண்டே சொன்னது உன்னை காப்பாத்துன என்னை கொல்ல துணிஞ்சுட்டியோ.  நீ சொன்னது ஒன்னு நீ செய்றது ஒன்னு. இப்படி பொய் சொல்லி ஏமாத்தி துரோகம் பண்ணுறியே நீயெல்லாம் உருப்பட மாட்டேனு சொல்லி ஓடியது. வழியில் ஒரு குரங்கு வந்தது அதனிடம் அந்த மான் தன் நிலையை சொல்லி உதவி கேட்டது. உடனே குரங்கு நான் நம்ப மாட்டேன் அது எப்படி உன்னால திறக்க முடியும்? அந்த புலியால எப்படி கூண்டுக்குள்ள போக முடியும் என்று குரங்கு சொன்னது. இதை கேட்ட புலிக்கு ரெம்ப ரோஷம் வந்தது. இந்தா பாரு நீயே வந்து பாரு. நான் மறுபடியும் கூண்டுக்குள்ளே போய் காட்டுறேன் எப்படி மான் திறக்குதுனு பாரு என்று ரோஷத்தோடு கூண்டுக்குள்ளே சென்றது. புலி கூண்டுக்குள்ளே சென்றதும் கொண்டி தானே மூடியதும் மானும் குரங்கும் சந்தோஷமடைந்தது. சரியாக புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு புலி ஏமாந்து போனது.

No comments:

Post a Comment