Tuesday 7 July 2015

ஹெல்மட் பத்தி - ஜனங்க என்ன சொல்றாங்க!

ஹெல்மட் பத்தி - ஜனங்க என்ன சொல்றாங்க!
ஜனங்க என்ன சொல்வாங்கனு இங்கே சொல்வதை யாரும் பின்பற்ற வேண்டாம். எல்லாரும் ஹெல்மட் போட்டுக்கிட்டு போங்க. அதுதான் சரியான வழிமுறை

ஹெல்மெட் எங்கே கிடைக்குதுன்னு தெரியறதை விட, போலீஸ் எங்கே நிற்பாங்க அப்படிங்கிறத நம்ம ஆளுங்க நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்கப்பா

கட்டாய ஹெல்மெட் பெண்களுக்கு தான் கஷ்டம். சதாரணமாவே ரொம்ப நல்லா ஓட்டுவாங்க; ஹெல்மெட் வேற போட்டுட்டா சுத்தம்.

பின்னால உட்காருவோரும் ஹெல்மெட் போடணுமாம். பேசாம டூவீலரை பாதி விலைக்கு வித்திட்டு சைக்கிள் வாங்கலாம்னு இருக்கேன்

ம்...  என்செய்றது. மன்மதன் மாதிரி இருக்கும், நம்ம ஹேர் ஸ்டைல் ஹெல்மெட்டை மாட்டிக்கிட்டும் கழட்டிக்கிட்டும் இருந்தால் மொட்டை மதன் மாதிரி ஆகிடுது.

ஆயிர ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்கிறதவிட, இருபது ரூபாயில்,அம்மா ஸ்டிக்கர் ரெண்டு வாங்கி வண்டில ஒட்டுறது சேப்டி. என்ன நான் சொல்றது?

ஹெல்மெட் தான் வாங்கியாச்சே; அதை தலையில் மாட்டாம, ஏன்யா வண்டியின் முன்னாடி, பின்னாடின்னு கட்டி தொங்கப் போட்டுகிட்டு சுத்துறீங்க; ஏதாவது வேண்டுதலா? 

ஹெல்மெட் போடாம போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டா, லைசென்ஸ் இருந்தாலும் இல்லன்னு சொல்வது புத்திசாலித்தனம்னு ஒருத்தர் சொல்றார்.

 அந்தியூர் அருகே ஹெல்மெட் பிரச்சனையால் மனைவிகள் மாறிய சுவராஸ்யம்

அந்தியூர் அருகே வெள்ளித் திருப்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்குக்கு இரவில் ஒரு தம்பதியினர் பெட்ரோல் போட வந்தனர். இவர்கள் பருவாச்சி செல்வதற்காக வந்திருந்தனர். இதேபோல் மற்றொரு கணவன்மனைவியும் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட வந்தனர். பெட்ரோல் பங்குக்கு வந்த இந்த 2 பெண்களின் கணவர்களும் கருப்பு கலரில் ஹெல்மெட் அணிந்திருந்தனர். மோட்டார் சைக்கிளும் ஒரே மாதிரியாக இருந்தது. மேலும் இருவரும் வெள்ளை கலர் சட்டை மற்றும் பேண்ட்டும் அணிந்திருந்தனர். இந்த நிலையில் பெட்ரோல் போட்ட பிறகு பருவாச்சி செல்ல இருந்த தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். அப்போது கணவரின் வண்டி என நினைத்து பின்னால் இருந்த மோட்டார் சைக்கிளின் பெண் ஏறி புறப்பட்டு விட்டார். இதேபோல் மற்றொரு பெண்ணும் தனது கணவரின் மோட்டார் சைக்கிள் என நினைத்து ஏறி சென்றார். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள், ஹெல்மெட், சட்டை கலர் என அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்ததால் 2 பெண்களும் கணவரை விட்டு விட்டு மாறி மோட்டார் சைக்கிளில் சென்றனர். இந்த நிலையில் பருவாச்சி செல்லக்கூடிய மோட்டார் சைக்கிளில் இருந்த பெண் திடீரென, கணவர் வேறு பாதையில் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பருவாச்சிக்கு செல்ல வழி தெரியவில்லையா? என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர், வண்டியை நிறுத்தி ஹெல்மெட்டை கழட்டினார். அப்போது தான் தெரிந்தது. ஆஹா..! இருட்டில் கணவர் என நினைத்து வேறொருவரின் வண்டியிலா இவ்வளவு நேரம் உட்கார்ந்து வந்தோம்...? என அந்த பெண் வெட்கி தலை குனிந்தார். அதன்பிறகு இருவரும் வெள்ளி திருப்பூர் பெட்ரோல் பங்குக்கு சென்றனர். அப்போது இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணும் ஆணும் அங்கு வந்தனர். இதன்பிறகு 2 தம்பதியினரும் ஒருவருக்கொருவர் வருத்தம் தெரிவித்து கொண்டனர். பின்னர் அவரவர் மனைவிகளுடன் வண்டியில் புறப்பட்டு சென்றனர். ஹெல்மெட்டால் வந்த பிரச்சனையை பார்த்தீங்களா...! என்று தலையில் அடித்தப்படி பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சிரித்து கொண்டனர்...!!!

No comments:

Post a Comment