Thursday 2 July 2015

இந்தியாவில் பெருகிவரும் இணைய பயனாளர்கள் குறித்து கவலை?

இந்தியாவில் பெருகிவரும் இணைய பயனாளர்கள் குறித்து கவலை

 இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை வேகமாக அதிகரித்து வருகின்றன இதன் மூலம் இணையத்தை தொடர்பு கொண்டு தங்களுடைய வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வோரின் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது குறித்து எல்லா நாடுகளும் மகிழ்ச்சி அடைந்தாலும், ஒரே ஒரு நாடு மட்டும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அதுதான் அமெரிக்கா. இந்தியாவில் மிக அதிகான எண்ணிக்கையில் பயனாளர்கள் பெருகி வருகின்ற காரணத்தினால் ஆன் லைன் தகவல் திருட்டும் அதிகமாகும் என அமெரிக்கா கவலைப்படுகிறது.அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சமீபத்தில் அளித்துள்ள அறிக்கையில் (Special 301 Report for 2015) இந்தக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயனாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சியில், எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் முடிவிற்குள்ளாக, மொபைல் வழி இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில், 21 கோடியே 30 லட்சமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.  இது கடந்த ஆறு மாதங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்  வளர்ச்சி 23% ஆக உள்ளது. இணையத்தைப் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டின் இறுதியில்  37 கோடியாக உயர்ந்து  உலகில் இரண்டாவது நாடாக அமையும் என்று தெரியவருகிறது.  இணையத் தகவல் திருட்டைத் தடுப்பதற்குண்டான பிரிவுகளை இந்திய அரசு ஏற்படுத்த வேண்டும். என்று அமெரிக்க அரசு, இந்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment