Saturday 4 July 2015

உலர்திராட்சை மருத்துவக் குணங்கள்




உலர்திராட்சை மருத்துவக் குணங்கள்

உலர் திராட்சையில் வைட்டமின் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. மேலும் சுக்ரோஸ்ப்ரக்டோஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12 அமினோ அமிலம், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் போன்ற  சத்துகளும் உள்ளது. இதில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் இதைச் சாப்பிட எலும்புகள் உறுதிபெறும். பற்கள் வலுபெறும்.  உடல் வளர்ச்சி பெறும்.  குழந்தைகள் தேகபுஷ்டியாக தினமும் இரவு தூங்கும் முன்பு பாலில் திராட்சை போட்டு  காய்ச்சி அருந்தச்செய்யுங்கள். மேலும் இதனால் மலச்சிக்கல் தீர்கிறது. உலர் திராட்சை தாமிர சத்தும் உள்ளதால் அது ரத்தத்தில் உள்ள  சிவப்பணுக்கிளின் எண்ணிக்கையை அதிகரிகிறது. மஞ்சள் காமாலை  நோய் இருப்பவர்கள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த உலர்திராட்சை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை விரைவில் குணமாகும். பித்தத்திற்கும் இது சிறந்த மருந்து. கர்ப்பிணி பெண்களும் பாலில் உலர் திராட்சை போட்டு சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

No comments:

Post a Comment