Saturday 4 July 2015

முட்டையின் மருத்துவ பயன்கள்


முட்டையின் மருத்துவ பயன்கள்

முட்டையில்
1.கொழுப்பு,
2.புரதம்,
3.வைட்டமின்கள்,
4.இரும்புச் சத்து
5. அயோடின்
6. கால்சியம்
7. புரதம்
8. போலிக் அமிலம்
9. செறிவற்ற கொழுப்பு
10. அயோடின்
ஆகிய சத்துக்கள் உள்ளது.
வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று டாக்டர்கள் சொல்கின்றனர்.தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ் முட்டையில்தான் உள்ளது.தசைகளின் வலிமைக்கு புரதம் அவசியம் அதுவும் இந்த முட்டையில் வெள்ளை கருவில் அதிகமாக உள்ளது. தினமும் முட்டை சாப்பிட்டால் இதய நோய் ஏற்படாதாம்! இதயத்திற்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளனவாம்.தினமும் குழந்தைகளுக்கு ஒரு முட்டை கொடுப்பதன் மூலம் அவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.தலைமுடி வளர்ச்சி மற்றும் தோல் பளபளப்பிற்கு முட்டை சிறந்த பங்காற்றுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. முட்டையில் தைராய்டு  ஹார்மோன் சுரப்பதற்குத் தேவையான அயடின் உள்ளது. குழந்தை பருவத்தில் இருந்தே தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் வயதான பின்பு ஏற்படக்கூடிய கார்ட்க்ராக்ட் பிரச்சினையில் இருந்து தப்பலாம். முட்டையில் உள்ள வைட்டமின் டி உயிர்ச் சத்து எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒருநாளைக்கு 300 மில்லி கிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் நம் உணவில் சேரலாம். ஒரு முட்டையில் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது.

முட்டை கீழ்கண்ட நோய்களுக்கு நிவாரணியாக செயல்படுகிறது.
1.குழந்தைகளிடம் போதிய வளர்ச்சியி இல்லாமல் இருந்தால்
2.குழந்தைகளின் எடை குறைவாக இருந்தால்
3.நடப்பது, பேசுவது,சிந்திப்பது ஆகிய செயல்களில் மந்தம் இருந்தால்
4.உப்பிய வயிறு, சூம்பிய கை, கால்கள், 
5.முடிகொட்டுதல் அல்லது மெலிதல்,
6.முடி செம்பட்டை ஆதல், கண்களில் வறட்சி, பார்வைக் குறைவு ஏற்படுதல்.
7. நெஞ்சு படபடத்தல், பல் ஈறுகளில் ரத்தக் கசிவு அல்லது அவை சிவப்பாதல், மூக்கிலிருந்து ரத்தம் வடிதல்
8.தோலில் வறட்சி அல்லது வெடிப்பு, கவலை, பலவகையான நரம்பு அல்லது மனம் சம்பந்தப்பட்ட கோளாறுகள்

நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். மருத்துவர்களின் ஆலோசனையின்படி வாரம் ஓரிரு முட்டை சாப்பிடலாம்.

No comments:

Post a Comment