Thursday 2 July 2015

ஒரு லட்சத்திற்கும் மேல் மூலிகைச் செடி

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை மூலிகைகளைத் தேடிக் கண்டுபிடித்து அதை எடுத்து கொண்டு வந்து ஆர்வத்துடன்சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராஜ் என்பவர் வளர்த்து வருகிறார். இவர் நெல்லை மற்றும் பாபநாசத்தில் பல ஏக்கர் நிலத்தில் வீரமாமுனிவர் மூலிகைப் பண்ணையை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையிலிருந்து மூலிகைச் செடிகளை ஒரு லட்சம் பேருக்கும் மேல் கொடுத்து வளர்க்கச் செய்து வருகிறார். பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன வளாகங்களில் இவரே மூலிகைச் செடிகளை நடவு செய்வதுடன் அதன் மருத்துவக் குணங்களை விளக்கி அங்குள்ள ஊழியர்கள் அதனை நன்கு பராமரிக்கும் சூழலை உருவாக்கிவருகிறார்.

No comments:

Post a Comment