Wednesday 1 July 2015

நாட்டு நடப்புக்கள்


ரஜினி, கமல், விஜய், சூர்யா பட்டியலில் இணைந்த தனுஷ்

இளைஞர்களிடையே புகைப் பிடிக்கும் பழக்கம் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் இடம்பெரும் புகைப் பிடிக்கும் காட்சிகள் முக்கியக் காரணமாக உள்ளன. நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்டவர்கள் திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்து  மேலும்...


கிளிகள் பேசுவது எப்படி- புதிய ஆய்வு
நாம் சொல்வதைப்போன்றே கிளியால் பேச முடிவதற்கு காரணம், அதன் மூளையில் இருக்கும் கோரஸ் பகுதியில் உள்ள வெளிவட்டங்களே என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும்


யானைக்குட்டிகள் 24 விற்பனை
ஜிம்பாப்வே நாட்டிலிருந்து  சீனாவின் தென்பகுதி நகரான குவாங்ஜோவிலுள்ள வன சரணாலயத்துக்கு 40ஆயிரம் டாலர் விலையில் யானை குட்டிகள் விற்பப்படுகிறது. ஜிப்பாப்வே நாட்டில் முறைகேடாக  யானைகள் வேட்டையாடப்படுகிறதாம். மேலும் படிக்க...


பசிக்காமல் இருக்க மாத்திரை கண்டுபிடிப்பு!
 மனிதர்களுக்கு பசிக்காமல் இருக்க ஒரு புதுவித மாத்திரை தயாரிக்கப்படுகிறது. அந்த மாத்திரையை லண்டன் இம்பீரியல் கல்லூரியும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்..  மாத்திரையில் உள்ள "அசிடேட்" என்ற மூலக்கூறு உணவு பொருளில் மேலும் படிக்க


ஹெல்மட் காமெடி

போலீசார்: உன் செயினை யாருமா பறிச்சது?
பெண்: கறுப்பு ஹெல்மெட் போட்ட ஆள் சார்.
போலீசார்: வண்டியை அவன் தான் ஓட்டினானா?
பெண்: இல்ல சார்... ஓட்டுனவன், பச்சை ஹெல்மெட் போட்டு இருந்தான்.
போலீசார்: சாட்சி யாராவது இருக்காங்களா?
பெண்: சிவப்பு ஹெல்மெட் போட்டு இருந்தவரு, இதை கண்ணால பார்த்தாரு சார். மேலம் படிக்க...

ரூ 2 லட்சம் கோடி தர்மம் செய்கிறார் இவர்!
 ரியாத்: சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால் தனது ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதாக அறிவித்துள்ளார். சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால் தனது ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்யப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.மேலும் படிக்க...


ஒரு லட்சத்திற்கும் மேல் மூலிகைச் செடி !
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை மூலிகைகளைத் தேடிக் கண்டுபிடித்து அதை எடுத்து கொண்டு வந்து ஆர்வத்துடன்சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராஜ் என்பவர் வளர்த்து வருகிறார். இவர் நெல்லை மற்றும் பாபநாசத்தில் பல ஏக்கர் நிலத்தில் வீரமாமுனிவர் மூலிகைப் பண்ணையை நடத்தி வருகிறார்.  மேலும் படிக்க...


 60 வயது பெண் - 10 மாதங்களில் 5முறை கர்ப்பம் ஆகிய அதிசயம்!
அரசாங்க நிதி உதவிக்காக 10 மாதங்களில் 5முறை  'கர்ப்பிணியான' 60 வயது பெண்! லக்னோ:   ஜனனி சுரக்ஷா என்ற திட்டம் நாடு முழுவதிலும் 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பேறுகால நேரங்களில்  பெண்கள் மருத்துவமனைக்கு வந்து குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும், இறப்பு விகிதத்தை குறைப்பதற்காகவும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் படிக்க...

மிரட்டும் சீனா
டெல்லி: இந்திய பெருங்கடல் எல்லை பகுதியை கொல்லைப்புறமாக கருதினால் இந்தியா எதிர்காலத்தில் மோதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று மிரட்டியுள்ளது சீனா.மேலும் படிக்க...


2ஜி  முறைகேடு.! உண்மை நிலை என்ன?
  இப்போதைய ஸ்பெக்ட்ரம் ஏலம் காண்பிக்கும் உண்மைகள்... ஆ.ராசாவால், 2Gயில் 1.76 லட்சம் கோடி இழப்பு என்று CAG அடித்துவிட்டபோது, இழப்பை கணக்கிட ஆடிட்டர் வினோத் ராய் எடுத்துக்கொண்ட தொகையானது 1 MHzக்கு 3,350 கோடி... அதாவது 52.7 Mhz அலைகற்றைகளை, இந்த தொகைக்கு ஏலம் விட்டிருந்தால், 1.76 லட்சம் கோடி அரசுக்கு கிடைத்திருக்கும்,ஆனால் கிடைத்ததோ 12,386 கோடிகள் என்பதுதான் CAGயின் அறிக்கை.. இப்போது 2G ஏலம் நடைபெறுவது மொத்தம் 380.75 MHz அலைகற்றைக்கு மேலும் படிக்க....


இந்தியாவில் பெருகிவரும் இணைய பயனாளர்கள் குறித்து கவலை

 இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை வேகமாக அதிகரித்து வருகின்றன இதன் மூலம் இணையத்தை தொடர்பு கொண்டு தங்களுடைய வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வோரின் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது குறித்து எல்லா நாடுகளும் மகிழ்ச்சி அடைந்தாலும், ஒரே ஒரு நாடு மட்டும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அதுதான் மேலும் படிக்க...

வெண்புள்ளி நோய்க்கு - மருந்து கண்டுபிடிப்பு
ஆங்கிலத்தில் விட்டிலிகோ எனப்படும் வெண்புள்ளி நோய்க்கு  அமெரிக்காவைச் சேர்ந்த யேல் பல்கலை மருத்துவ விஞ்ஞானிகள் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளார்கள் மேலும் படிக்க


கணவன் மனைவி சண்டையை நிறுத்த - புதிய மருந்து கண்டுபிடிப்பு

திருமணம் ஆகி ஒரு வருடமாகியும் ஒரு தம்பதியர்களுக்கிடைய சண்டைதான். எப்பப்பார்த்தாலும் அவர்களுக்குள்ளே சண்டைதான்.  அவர்கள் திருந்தியபாடில்லை. அதனால் அருகில் இருக்கும் மேலும் படிக்க...

ஏமாறாதே! ஏமாற்றாதே -சிறுகதை

          ஒரு காட்டுல ஒரு புலி இருந்துச்சாம். அநதப்புலி ஒருநாள் இரை தேடி காட்டை சுந்தி வந்ததாம். அப்போ ஒரு இடத்துல வேட்டைக்காரங்க வச்சுருந்த கூண்டுக்குள்ள இருந்த கொஞ்சம் இரையை வாயில் எச்சில் ஒழுக  பார்த்ததாம். அப்புறம் அந்த இரையை சாப்பிட உள்ளே சென்றதாம். உடனே அந்த கூண்டு மூடிக்கொண்டதாம். அதால வெளியே வர முடியலையாம். .மேலும் படிக்க...

ஆன்மீகம்

          பிச்சை எடுக்கிறவர்களை பார்த்து இவன் உடம்பு நல்லாத்தானே இருக்கு போய் வேலை செஞ்சா என்ன என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். அவனின் கர்மா அது அதனை நீங்கள் சொல்லி அவனின் கர்மாவை நீங்கள் வாங்கிக்கொள்ளாதீர்கள். ஒரு இடத்தில் நீங்கள் நின்றுக்கொண்டு இருக்கிறீர்கள். மேலும் படிக்க


 பீகாரில் 1,400 ஆசிரியர்கள் ராஜினாமாjuly 4 -2015 
 பாட்னா ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்
பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் போலி கல்விச் சான்றிதழ் தந்து பணியில் சேர்ந்தவர்கள் ஜூலை  8க்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. தவறினால், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அவர்களுக்கு சம்பளமாகக் கொடுத்த தொகையும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த சூழ்நிலையில், தொடக்க கல்வி ஆசிரி யர்கள்  1,400 பேர்  நேற்று ராஜினாமா செய்தனர். இன்னும் ஐந்து நாட்களில் மேலும் பலர் ராஜினாமா செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



கரிமில வாயுக்கள் கடலையே மாற்றிவிடலாம் -ஓர் எச்சரிக்கை!
july 4 -  2015
மனிதச் செயல்களால் வேளியேறும் கரிமில வாயுக்களின் அளவு மிக அதிகமாக உள்ளது. இதன் அளவை குறைக்காவிட்டால் கடல் வளங்கள் மறுபடியும் சரிசெய்ய முடியாத அளவுக்கு மோசமான பாதிப்பு அடையும் என்று விஞ்ஞானிகள் தெரிவி்த்துள்ளார்கள். பருவநிலை மாற்றத்தால் கடலின் அமில தன்மை அதிகமாகி உயிர்களை அழிக்கின்றன என்று “சயின்ஸ் சஞ்சிகையில் ” வெளியாகி உள்ள ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.


மருத்துவ சிகிச்சை - கவனக்குறைவு - இழப்பீடு 1.8 கோடி தர நீதிமன்றம் உத்தரவு
july 4 - 2015
சிகிச்சையில் குறைபாடு: தமிழக அரசு 1.8 கோடி கொடுக்க உத்தரவு
மருத்துவ சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக கண் பார்வையை இழந்த 18 வயது பெண்ணுக்கு, 1.8 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசால் நடத்தப்படும் அரசு மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடை பெற்றுள்ளதால், தமிழக அரசுதான் இந்த இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது போன்ற வழக்குகளில் இதுவரை இவ்வளவு பெரிய இழப்பீடு உத்தரவு இடப்பட்டதில்லை என்றும் இப்போதுதான் முதல் முறையாக இவ்வளவு பெரிய தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழக்கை விசாரித்த நுகர்வோர் மன்றம் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதையெதிர்த்து, இருதரப்புமே உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தன. தமிழக அரசின் முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்தத் தீர்ப்பை அளித்தது.


No comments:

Post a Comment