Monday 6 July 2015

சந்தி சிரிக்கும் தொந்தியால் ஏற்படும் நன்மைகள் யாவை?

சந்தி சிரிக்கும் தொந்தியால் ஏற்படும் நன்மைகள் யாவை? அதன் சிறப்பம்சங்கள் என்ன?

1. சமுதாயத்தில் ஒரு மரியாதையை தருவது தொந்தியே . உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படுவதன் மூலம் இதை உணரலாம்.

2. நாம் குப்புறக் கீழே விழுந்தால் நமது மூக்கு மூஞ்சி உடையாமல் பாதுகாப்பது நமது மாபெரும்தொந்தியே

3.   வேலையில்லாமல சும்மாயிருக்கும் பொழுது தொந்தியை மெதுவாக  வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அல்லது குண்டோ அல்லது உருண்டை கல்லோ அல்லது பயறுகளோ எடுத்து நமது தொந்தியில் போட்டு போட்டு அது எப்படியெல்லாம் சறுக்குகிறது என்று பார்த்து பார்த்து ரசிக்கலாம். இப்படி இது சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகவும் பயன்பதும் நமது தொந்திகளே

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கி விளையாடவும்இந்த மாபெரும் தொந்தி பயன்படுகிறது.

5. நம்வீட்டுச் செல்லப் பிராணிகளான நாய்குட்டிகள், பூனைக்குட்டிகள் ஆகியன படுத்துறங்கும் சூப்பர் குஷனாகவும் இந்த தொந்தி பயன்படுகிறது

5. பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையார் கிடைக்கவில்லை என்றால் கவலையே பட வேண்டாம். பேசாமல் தொந்தி உள்ளவரையே பிள்ளையார் போல வேஷம்போட்டு பிள்ளையாராக பயன்படுத்திக்கொள்ளலாம்.

6. பாக்கெட்டில் பெரிய மற்றும் வெய்ட்டான பொருட்களைப் போட்டால் அது கீழே விழாமல் காக்கும் சுமைதாங்கியாக திகழ்வது நம் மாபெரும்தொந்தியே மேலும் அந்த பாக்கெட் கிழியாமல் பாதுகாப்பதும் நமது மாபெரும் தொந்தியே .

7. தொந்தி ஏன் சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இல்லாமல் உருண்டை வடிவத்தில் இறைவன் ஏன் படைத்தான் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த உலகமும் உருண்டை.  இந்த உலக்தை சுற்றிலும் இருக்கும் கோள்களும் உருண்டை  இதை மனிதனுக்கு உணர்த்தவே தொப்பையை உருண்டையாக இறைவன் படைத்துவிட்டான்.

8.அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏனென்றால் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் கூடுமாம். தொந்தி குறைந்தால் தொண்டர்கள் குறைவார்களளாம்.

9.ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்தும் வளர்ந்தும்  வருகிறதாம்.

இத்தகையை அருமை பெருமை வாய்ந்த மாபெரும் தொந்திகளை போற்றி வளர்ப்போம்! கண்டதையும் தின்று வளர்ப்போம்!
தொந்தி உடையார் சிறப்புடையார்!
மாபெரும் தொந்தி வாழ்க! மாபெரும் தொந்தி வளர்க!

No comments:

Post a Comment