Tuesday 7 July 2015

பொன்மொழிகள்

 பொன்மொழிகள்.

மனிதனுக்குத் துணிச்சலைப் போல உலகில் உண்மையான நண்பன் வேறு யாருமில்லை.

கோபம் அன்பை அழிக்கிறது. செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.
மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.

மிகவும் நேர்மையாக இருக்காதே. நேராக வளர்ந்த நெடிய மரங்கள்தான் முதலில் வெட்டுக்கு இறையாகும். நேர்மையாளர்களும் அப்படித்தான் வெட்டப்படுவார்கள்

நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி

நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது.
உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு, உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு

நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்!
தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!


எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு
மனித சக்தியும் நிற்க முடியாது!


வாழ்வின் வெற்றி என்பது ஒரு மனிதன் பின்பற்றும் சத்தியத்தைப் பொறுத்தது.

செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும்
உதவி செய்யாது.


அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.
அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.


தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.

மனிதன் எதை உறுதியாக நினைக்கிறானோ அதுவாகவே அவன் மாறிவிடுவான்.
எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம்
இருக்கிறது என்பதே முக்கியம்.


சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும்
சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.


பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது.

No comments:

Post a Comment