Sunday 5 July 2015

மனைவிகிட்ட அடிவாங்காம இருக்கிறதுக்கு


சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம். இரண்டு நாளா என்னய்ய
பண்ணிணே? எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.


என்னம்மா சொல்றீங்க! உங்க பையன் ஆயிரம் ரூபாயை முழுங்கிட்டானா எப்படி?
பையன் ஒரு ரூபாயை முழுங்கிட்டான்! அதை எடுக்க டாக்டர் ஆயிரம் ரூபாயை பீஸா முழுங்கிட்டாரே!


மனைவி எங்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என்ன?
என் அழகான முகமா? அல்லது என் அன்பான மனமா? அல்லது என் பணிவான
குணமா?
கணவன் உன்னோட இந்த காமெடிதான் எனக்கு ரெம்ப பிடிக்கும்!


உங்க கதைகளை படிக்கும்போதே சொக்கிப் போயிடறேன்னு சொல்றீங்களே அவ்ளோ உயிரோட்டமாவா இருக்குது!
நீங்க வேற தூக்கம் சொக்கிட்டு வருதுன்னு சொல்றேன்!


மந்திரியாரே! நால்வகை சேனைகளும் போருக்குத் தயாராகிவிட்டனவா?
பேருக்குத் தான் தயாராகி உள்ளன மன்னா!
?!!!


அம்மா தாயீ, உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
என் புருஷன்தாம்பா இருக்கார் பரவாயில்லையா?


இப்ப எதுக்கு ஊரில் இருந்து உங்க அம்மாவை வரச்சொல்றே?
நீங்கதானே சொன்னீங்க! மாமியாரை தாயா பார்த்துக்கணும்னு! வரசொல்றேன் பார்த்துக்கங்க!


மன்னா! எதிரியிடம் இருந்து ஓலை வந்திருக்கிறது!
அப்படியானால் ஓடி ஒளியவேண்டிய வேளை வந்துவிட்டது என்று சொல்லுங்கள்!


புதிதாக திருமணம் ஆனவர் தன் மனைவிக்கு காது கேட்கிறதா என சோதிப்பதற்காக  வெளியிலிருந்து மனைவிடம் இன்று என்னை குழம்பு என்று கேட்டார் பதில் வரவில்லை. வீட்டிற்குள் வந்து என்ன குழம்பு என்றார் மனைவிடமிருந்து  பதிலில்லை. சமையலறைக்கு சென்று என்ன குழம்பு என்றார். மூன்றாவது முறையும் பதிலில்லை. அருகில் வந்தார் அதற்கு மனைவி நீங்கள் 3 முறை கூப்பிட்டதற்கு இன்று இன்று சாம்பார் என்று சொனனானே கேட்க வில்லையா என்றாள்.

மந்திரியாரே போருக்கு புறப்படவேண்டும் சகுனங்கள் சரியாக இருக்கிறதா?
சங்கு ஊதிவிட்டார்கள் மன்னா!


உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்துக்கப்புறம்
நீங்கிடுச்சாமே?

ஆமா! கடைசியா இருந்தது சந்தோஷம் இப்ப அதுவும் நீங்கிருச்சி.

மனைவிகிட்ட அடிவாங்காம இருக்கிறதுக்கு பூரிக்கட்டையை ஒளிச்சு வைச்சது தப்பா போச்சு!
ஏன்?
பூரிக்கல்லாலே அடிக்க ஆரம்பிச்சிட்டாய்யா!


என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா. ரொம்ப
கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.
உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான்
துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா.


லோன் வாங்கி கட்டியும் திரும்ப லோன் தரமாட்டேங்கறாங்களா? ஏன்?
லோன்வாங்கி வீட்டை கட்டினேன் லோனை கட்டலையே!


எப்போதும் தமிழில் அச்சனை. எங்கே?
என் வீட்டில்.


திருஷ்டி பூசணிக்காயை சுத்தி ஒடைச்சாங்களே! திருஷ்டி எல்லாம் கழிஞ்சி போச்சா?
தெருவுல போன ரெண்டு பேரோட கால்தான் நசிஞ்சு போச்சு!


உன் வீட்டுக்காரரைத் திட்டுவியா? சே அதெல்லாம் நான் செய்யமாட்டேன்...
அப்பப்ப அடிக்கறதோடு சரி


இடைத்தேர்தல்ல  போட்டியிட வேண்டாம்னு  தலைவர் ஏன்  பிடிவாதம் பிடிக்கிறார்?
இதுவே கட்சிக்கு கடைத் தேர்தலா ஆயிடப்போவுதுன்னு ஒரு பயம்தான்!


நீ எப்போடீ இந்த புடவை எடுத்தே? தீபாவளிக்கா? இல்லை பொங்கலுக்கா?
கடைக்காரர் குனிஞ்சுக்கிட்டு பில் போடும் போது.


கால் அமுக்கிவிடாம என் மனைவி தூங்கவே மாட்டா?
இந்த காலத்திலேயும் இப்படி இருக்காங்களா?
நீ வேற நான் அவ காலை அமுக்கி விட்டாத்தான் அவ தூங்குவான்னு சொல்ல வந்தேன்!


எவ்ளோதான் முயற்சி பண்ணாலும் பதினோரு மணிக்கு மேல தூக்கம் வர மாட்டேங்குது டாக்டர்!
படுக்கிற இடத்தை மாத்தி பாருங்களேன்!
ஆபிஸ்ல சீட்டை எல்லாம் மாத்த முடியலை டாக்டர்!


என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம் பரவாயில்லை என் மனைவிக்கு
என்னை கொல்ல தான் பிரியம்.


என்னங்க தலையிலே காயம்? உருட்டு கட்டை இடிச்சிட்டது
பார்த்து போககூடாது. ஆமா உருட்டு கடைடை எங்க இருந்துச்சி?
என் பொண்டாட்டி கையில


நம்ம கல்யாண நாளை நீங்க எப்படி மறப்பீங்க?!
நீதானே வாழ்க்கையிலே வர்ற துன்பங்களை கெட்ட கனவா நினைச்சு மறந்துடனும்னு சொன்னே!


என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்க தான் சாமி அருள் புரியணம்
அது முடியாமத்தான் நானே சாமியாராகி விட்டேன் மகனே.

No comments:

Post a Comment