Saturday 4 July 2015

பூண்டின் மருத்துவப் பயன்கள்

பூண்டின் மருத்துவப் பயன்கள்
ஒரு 100 கிராம் பூண்டில் உள்ள சத்துக்கள்
1. நீர்ச்சத்து 62.0கி ,  வெள்ளைபூண்டு
2. புரோட்டின் 6.3கி ,  வெள்ளபூண்டு
3. கொழுப்பு 0.1 கி,  வெள்ளைபூண்டு
4.தாதுக்கள் 1.0 கி, வெள்ளைபூண்டு
5.நார்ச்சத்து 0.8கி , வெள்ளை பூண்டு
6. கார்போஹைட்ரேட்ஸ் 29.8 கி வெள்ளை பூண்டு பயன்கள்
7. கால்சியம் 30 மில்லி கிராமும் வெள்ளை பூண்டு பயன்கள்
8. பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் வெள்ளை பூண்டு பயன்கள்
9. இரும்பு 1.3 மில்லி கிராமும்
10. வைட்டமின் சி 13 மில்லி கிராமும்
11.சிறிதளவு வைட்டமின் பி சத்துக்களும் உள்ளன.

பயன்கள்
1. இது ஒரு சிறந்த கிருமி நாசினி.வியற்வையை பெருக்கும்.
உடற்சக்தியை அதிகப்படுத்தும். தாய்பாலை விருத்தி செய்யும்.

2.இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றும். நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும்.
3. ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த காச நோய் தீரும்.
4. பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட்டால் சளி, இருமல், வாயு ஜீரணமின்மை,  காதுவலிமுகப்பரு, ஊளைச்சதை, இரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, இரத்த அழுத்தம் போன்ற அனைத்து நோயும் சரியாகும்.
5. 'மூலம்' உள்ளவர்கள் பூண்டு சாப்பிட நாளடைவில் சிறந்த குணம் காணலாம்.
6.உடம்பில் உள்ள நச்சுப் பொருட்கள் அழியவும் பூண்டு உதவும்.
7.பூண்டு உரித்து நன்கு வதக்கி (நெய்யில்) பாலில் கலந்து இரவு தூங்கப் போகும் முன்பு குடித்தால் நன்கு உறக்கம் வரும்.
8.மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
9.மூட்டு வலியைப் போக்கும்.
10. வெள்ளை பூண்டை உப்பு சேர்த்து இடித்து,சுளுக்கினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கு நீங்கிவிடும்.
11. வெள்ளை பூண்டையும் வெற்றிலையும் சேர்த்து அரைத்து தேமலின் மீது தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக தேமல் மங்கி கொண்டே வந்து கடைசியில் மறைந்துவிடும்.
12. இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

பூண்டை எளிதாக உரிப் பதற்கு : வெறும் வாணலியில் எண்ணெய் விடாது வறுத்து ஆறியபின் கையில் தேய்த்தால் தானே எளிதில் உரிக்கலாம். தண்ணீரில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் (வெதுவெதுப்பான நீர்) ஊற வைத்து உரித்தால் இன்னும் சுலபம். பூண்டு வாசனை பிடிக்காதவர்களுக்கு பூண்டை வெண்ணெயில் சிறிது (ஒரு சிமிட்டா உப்பு) உப்பு சேர்த்து வதக்க அதன் துர்வாசனை போயே போய்விடும்






No comments:

Post a Comment