Wednesday 1 July 2015

ஆன்மீகம்

தானம் செய்தால் கிடைக்கும் பயன்கள்:-
  
ஆடை தானம் – ஆயுள் விருத்தி
தேன் தானம் – புத்திர விருத்தி
அன்னதானம் – ஆண்டவன் அருள்
நெய் தானம் – பினி நீங்கும்
அரிசி தானம் – பாவம் அகலும்
தேங்காய் தானம் – காரிய வெற்றி



பிச்சை போடுதல்:-

       பிச்சை எடுக்கிறவர்களை பார்த்து இவன் உடம்பு நல்லாத்தானே இருக்கு போய் வேலை செஞ்சா என்ன என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். அவனின் கர்மா அது அதனை நீங்கள் சொல்லி அவனின் கர்மாவை நீங்கள் வாங்கிக்கொள்ளாதீர்கள். ஒரு இடத்தில் நீங்கள் நின்றுக்கொண்டு இருக்கிறீர்கள். அந்த இடத்தில் நீங்கள் டீ குடித்துக்கொண்டிக்கும்பொழுது ஒருவர் வந்து உங்களிடம் பிச்சை கேட்டால் அந்த நபருக்கு ஒரு டீயை உங்களால் வாங்கிக்கொடுக்கலாம்.

சிந்தனை:-
          சந்திரன். மனக்காரகன் சந்திரன் நன்றாக இருந்தால் நாம் சிந்திப்பது அனைத்தும் நல்லவையாக இருக்கும். பெளர்ணமி அன்று முழுவதும் சந்திரனை குறைந்தது மூன்று மணி நேரம் பார்த்து ரசித்தால் நமது மனது சுத்தமாகிவிடும் மன அழுத்தம் போய்விடும். சிந்தனைகள் தெளிவாகும். குழப்பங்கள் தீர்ந்துவிடும்.


 பொன்மொழிகள்.

மனிதனுக்குத் துணிச்சலைப் போல உலகில் உண்மையான நண்பன் வேறு யாருமில்லை. கோபம் அன்பை அழிக்கிறது. செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.
மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது. மேலும் படிக்க


செய்யக்கூடாத விஷயங்கள் - நீங்கள் அறிந்திட

விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்). பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம். அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல. லட்சுமிக்குத் தும்பை கூடாது.மேலும் படிக்க...



ஏகலைவனின் கட்டை விரலை துரோணர் பெற்றது தவறா?
துரோணாச்சாரியார் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. பாரத இதிகாசத்தில் துரோணர் மிகச் சிறந்த வில்வித்தை நிபுணர். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் குரு வாக இருந்து வில் வித்தையை போதித்த துரோணாச்சாரியரால் தான் பாரதப் போர் நடந்தது. துரோணரிடம் வில்வித்தை பயில வேண்டும் என ஏகலைவனின் ஆசையை துரோணர் நிறைவேற்ற வில்லை. துரோணரைத் தன் மானசீகக் குருவாகக் கொண்டு வில்வித்தையை ஏகலைவன் கற்கிறான். ஒருநாள் தன் குருவின் சிலையை நாய் ஒன்று அசிங்கப்படுத்தி விட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஏகலைவன் நாய் மீது அம்பு தொடுக்கிறான். நாய் உயிரிழந்து போகிறது. நாயின் உடலில் ஆயிரம் துளைகள். அம்புபட்டு நாய் ஒன்று இறந்து கிடப்பதை துரோணர் காண்கிறார். என்ன அதிசயம்! ஓர் அம்பில் ஆயிரம் துளைகள். அருச்சுனனுக்கு மட்டுமே சொல்லிக் கொடுத்த இந்த வித்தையை கற்றது யார்? யாரிடம் கற்றது? என்ற கேள்வி துரோணரை துளைக்கிறது. விடை தேடிய போது ஏகலைவன் என்பது தெரிய வருகிறது. ஏகலைவனை அழைத்த துரோணர் விடயத்தைக் கேட்டறிகிறார். ஆயிரம் துளையிடும் விற்திறன் ஏகலைவனிடம் இருப்பது ஆபத்து என்று உணர்கிறார். திட்டம் தீட்டுகிறார். வில்லுக்கு விஜயன் என்பதற்கு மாற்றம் வரக் கூடாது. அதேநேரம் துரியோதனன் தரப்பில் ஏக லைவன் போர் தொடுப்பானாயின் பாண்டவர்கள் வெல்ல முடியாது. ஆகையால் ஏகலைவனின் வலது கரத்து கட்டைவிரலை குருதட்சணையாகப் பெறுவது என துரோணர் தீர்மானித்தார். ஏகலைவனும் தன் வலது கரத்து கட்டை விரலை துரோணருக்குக் குருதட்சணையாகக் கொடுக்கின்றான். அந்தோ கொடுமை! தன் மாணாக்கனை வாழ்த்தி ஆசீர்வதிக்க வேண்டிய ஒரு குரு, அவனின் வில் வித்தையை சாகடிப்பது எங்ஙனம் நியாயமாகும்? என்ற கேள்வி ஏற்புடையதாயினும், ஒரு தர்மம் வெல்வதற்காக, அதர்மத்தை தோற்கடிப்பதற்காக இப்படியும் செய்துதான் ஆக வேண்டும் என்ற நியாயம் இவ்விடத்தில் அங்கீகரிக்கக் கூடியது.

No comments:

Post a Comment