Tuesday 14 July 2015

கிளிகள் பேசுவது எப்படி - மர்மம் விலகியது - புதிய ஆய்வு

கிளிகள் பேசுவது எப்படி- புதிய ஆய்வு
நாம் சொல்வதைப்போன்றே கிளியால் பேச முடிவதற்கு காரணம், அதன் மூளையில் இருக்கும் கோரஸ் பகுதியில் உள்ள வெளிவட்டங்களே என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உலகின் ஏழு வகையான கிளிகளின் மூளை திசுக்களை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது இது கண்டறியப்பட்டது. மற்ற பாடும் பறவைகள் போலில்லாமல் இதன் மூளையின் கோரஸ் பகுதியின் அமைப்பே இதற்கு காரணமாகும். கிளியால் புதுப்புது வார்த்தைகளை கற்றுக்கொள்ள முடியும். வேறு எந்த உயிரினத்தாலும் கிளி அளவுக்கு கற்க முடியாது என்றும் அவர்கள் சொல்கின்றனர். மூளையின் இந்த வளைய அளவின் மாற்றத்தை தவிர வேறு எதுவும் அதிலிருந்து தெரிந்துகொள்ள முடியவில்லை.

No comments:

Post a Comment